Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 990)

Paththati 32 - பல பத்ததி

யேந ஸ்திதா சிரஸி மே விதிநாதுநா த்வம் தேநைவ தேவி நியதம் மம ஸாம்பராயே ல‌க்ஷீகரிஷ்யஸி பதாவநி ரங்கநாதம் லக்ஷ்மீ பதாம்புருஹ யாவக பங்கலக்ஷ்யம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! நீ இப்போது எனது எந்தப் புண்ணியத்தின் பலனாக என் தலையில் உள்ளயோ, “இனி இங்கிருந்து செல்லமாட்டேன்”, என்று உறுதியுடன் நிற்கிறாயோ - அதே காரனத்தினால், எனது அந்திம காலத்தில், ஸ்ரீரங்கநாச்சியாரின் தாமரை மலர் போன்ற திருவடிகளில் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளம் பொருந்திய ஸ்ரீரங்கநாதனை, எனது பார்வைக்கு இலக்காகக் காண்பிப்பாயாக.