Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 989)
Paththati 32 - பல பத்ததி
த்வயி அர்ப்பிதேந சரணேந ஸத்த்வபாஜ: பாதாவநி ப்ரதித ஸாத்விக பாவத்ருச்யா: ரங்கேசவத் விதத்தே முஹுரங்க ஹாராந் ரங்கே மஹீயஸி நடா இவ பாவுகாஸ்தே
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது வைக்கப்பட்ட திருவடிகள் கொண்ட ஸ்ரீரங்கநாதன் தனது அவயவங்கள் அசைத்து பலவிதமான நடைகள் செய்து ஸஞ்சாரம் செய்கிறான். இது போன்று ஒரு சிலர் உன்னிடம் தங்கள் அனுஷ்டானத்தை அர்ப்பணம் செய்கிறார்கள். இதனால் அவர்கள் நல்வழி பெற்று, ஆனந்தம் அடைந்து, கண்ணீர் பெருகி, மேன்மையும் அடைகின்றனர். இப்படியாக உனது மேன்மையை அடைந்த அப்பெரியோர்கள், ஸ்ரீரங்கநாதன் போன்று மிகவும் பெரியதான ஸ்ரீரங்கம் என்ற அரங்கில் ஆட்டக்காரர்கள் போன்று, தங்களையும் மறந்து, அவயவங்களை அசைத்து ஆடுகின்றனர்.