Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 988)
Paththati 32 - பல பத்ததி
பத்தாஞ்சலி: பரிசரந் நியமேந ரங்கே விச்ராணித அச்யுத நிதிம் மணிபாதுகே த்வாம் கஸ்யாபி கூணித த்ருசோ தநிந: புரஸ்தாத் உத்தா நயேய ந கதாபி கரம் விகோசம்
இரத்தினக்கற்கள் இழைக்கப்ப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் என்னும் நழுவாத பெரும் நிதியை அளிப்பவளாக நீ உள்ளாய். இப்படிப்பட்ட உன்னை நான் எப்போதும் பற்றியவனாக, உனக்குக் கைங்கர்யம் செய்பவனாக இருப்பேனாக. இதனால் பயத்தை ஏற்படுத்துகின்ற கோபமான பார்வை பார்க்கின்ற எந்த ஒரு செல்வந்தன் முன்பும் நான் எனது விரித்த கையை ஏந்த மாட்டேன்.