Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 987)
Paththati 32 - பல பத்ததி
ஸ்வப்நேபி சேத் த்வம் அஸி மூர்த்தநி ஸந்நிவிஷ்டா நம்ரஸ்ய மே நரக மர்தந பாதரக்ஷே ஸ்தாநே தத் ஏதத் இஹ தேவி யத: ஸமாதௌ ஸந்தோ விதுஸ்தமபி தாத்ருச புத்திகம்யம்
நரகாசுரனை வதம் செய்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது ப்ரேமை கொண்டு உன்னை எப்போதும் வணங்கியபடி உள்ள எனது கனவில் நீ தோன்றி, எனது தலையில் அமரவேண்டும். அப்படி நீ அமர்ந்தாலும், அந்தச் செயல் பலனை அளிக்கவல்லதே ஆகும். காரணம் – யோகநிலையில் உள்ள முனிவர்கள் ஸ்ரீரங்கநாதனை இப்படியாக மானஸீக நிலையில் கண்டு அல்லவோ நன்மை அடைகிறார்கள்?