Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 986)
Paththati 32 - பல பத்ததி
மௌளௌ ஸ்திதா மகபுஜாம் அதவா ச்ருதீநாம் தத் ரங்கராஜ சரணாவநி வைபவம் தே அஸ்மாத்ருசாமபி யதி ப்ரதிதம் ததஸ் ஸ்யாத் ஸௌலப்யம் அம்ப ததிதம் தவ ஸார்வபௌமம்
ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! தாயே! நீ வேதங்களின் தலைகளில் உள்ளாய் அல்லது வேதங்களின் தலைப்பகுதியான உபநிஷத்துக்களில் உள்ளாய்; இது உனது பூர்ணமான மேன்மையாக உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட நீ எங்களைப் போன்ற தாழ்ந்தவர்களின் தலைப்பகுதிகளில் நின்றால் அல்லவோ, அனைத்து சாஸ்திரங்களும் கூறப்படுகின்ற உனது ஸௌலப்யம் (எளிமை) அனைவராலும் அறியப்பட்டதாகும்?