Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 985)

Paththati 32 - பல பத்ததி

காமாதி தோஷ ரஹிதம் த்வத் அநந்ய காமா: கர்ம த்ரயோதசவிதம் பரிசீலயந்த: பாதாவநி த்வத் அநுஷங்க விசேஷ த்ருச்யம் ஏகாந்திந: பரிசரந்தி பதம் முராரே:

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! உன்னைத் தவிர வேறு எதனையும் தங்கள் பயனாகக் கொள்ளாமல் உள்ள, உன்னை மட்டுமே நம்பியுள்ள உத்தமர்கள் செய்வது என்ன? பலனில் விருப்பம் கொள்வது முதலான தோஷங்கள் இல்லாத பதின்மூன்று விதமான கர்மங்களை இயற்றிபடி, உன்னுடைய சேர்க்கை மூலம் மிகவும் அழகு பெற்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை உபாஸித்தபடி உள்ளனர்.

பதின்மூன்று கர்மங்கள் = எம்பெருமான், அந்தணன், குரு, ஞானிகள் ஆகியவர்களை ஆராதிப்பது, சுத்தம், நேர்மை, அஹிம்ஸை, ப்ரம்மசர்யம் என்று உடலால் செய்யப்படும் ஐந்து கர்மங்கள்; நல்ல சொற்கள் கூறுதல், ஸத்யம் பேசுதல், வேதம் ஓதுதல் என்று வாயால் செய்யப்படும் மூன்று கர்மங்கள்; மகிழ்வுடன் இருத்தல், பரம்பொருளை எப்போதும் த்யானித்தல், மனம் அடக்குதல், உலக விஷயங்களை எண்ணாமல் இருத்தல், அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் என்பதான மனதால் செய்யப்படும் ஐந்து கர்மங்கள்.