Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 984)

Paththati 32 - பல பத்ததி

ரங்கேச்வரஸ்ய யதிதம் மணிபாதரக்ஷே பாதாரவிந்தயுகளம் பவதீ ஸமேதம் பும்ஸாம் உபோஷித விலோசந பாரணார்ஹம் க்ஷீரம் தத் ஏதத் இஹ சர்க்கரயா ஸமேதம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடன் எப்போதும் சேர்ந்தே உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள், தீயவை மட்டுமே அதிகமாக உள்ள இந்த உலகத்தில், நன்மை பயக்கும் மேன்மை கொண்டவையாக உள்ளன. இவற்றையும், உன்னையும் எண்ணியபடி ஒரு சிலர் உபவாஸம் (உண்ணாநோன்பு) இருக்கக்கூடும். அவர்களுக்கு நீங்கள் இருவரும் கண்களால் பருகப்படுகின்ற சர்க்கரை இட்ட பால் போன்று உள்ளீர்கள்.