Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 983)

Paththati 32 - பல பத்ததி

ஜ்ஞாநக்ரியா பஜந ஸீம விதூர வ்ருத்தே: வைதேசிகஸ்ய தத் அவாப்தி க்ருதாம் குணாநாம் மௌளௌ மமாஸி மதுஸூதந பாதுகே த்வம் கங்கேவ ஹந்த பதித விதிநைவ பங்கோ:

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஞானயோகம், கர்மயோகம் மற்றும் பக்தியோகம் ஆகியவற்றின் எல்லைகளுக்கு வெகுதூரத்தில் நான் உள்ளேன். அவற்றைப் பெறுவதற்குரிய குணங்களுக்கும் அப்பால் நான் உள்ளேன். இப்படிப்பட்ட என் தலை மீது, முடவன் ஒருவன் கங்கையில் விழுந்தது போன்று, நீயாகவே வந்து அமர்ந்தாய். என்ன வியப்பு!