Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 982)

Paththati 32 - பல பத்ததி

பதயுகம் இவ பாதுகே முராரே: பவதி விபூதி: அகண்டகா த்வயைவ கதம் இவ ஹ்ருதயாநி பாவுகாநாம் த்வத் அநுபவாத் உபஜாத கண்டகாநி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் இரண்டும் உன்னால் எப்படி முள் குத்தாமல் காப்பாற்றப்படுகிறதோ அது போன்று, இந்த உலகமும் உன்னால் சத்ருக்கள் இல்லாமல் ஆக்கப்படுகின்றது. இப்படி உள்ளபோது, உன்னைத் த்யானம் செய்பவர்களின் இதயங்களில் மட்டும், உனது அனுபவம் காரணமாக கண்டகம் (கண்டகம் என்றால் முள் என்று பொருள். ஆனால் இங்கு மயிர்க்கூச்சல் என்று சிலேடையாக வந்தது) உள்ளதாக இருக்கின்றது?