Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 981)

Paththati 32 - பல பத்ததி

அபி ரக்ஷஸி த்வம் அநபாயநிதிம் மணிபாதுகே மதுபித: சரணம் அத ஏவ தேவி தத் அநந்ய தநா: சிரஸா வஹந்தி பவதீம் க்ருதிந:

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்ற மிகவும் உயர்ந்த அழிவற்ற செல்வத்தை நீ எப்போதும் காத்தபடி உள்ளாய். இதனால்தான், அந்தத் திருவடிகளைத் தவிர தங்களுக்கு வேறு எதுவும் உயர்ந்தது அல்ல என்று எண்ணுபவர்கள், உன்னைத் தங்கள் தலையில் தாங்குகிறார்கள்.