Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 980)
Paththati 32 - பல பத்ததி
விம்ருச்ய ரங்கேச்வர பாதரக்ஷே வாரக்ரமம் நூநம் அவாரணீயம் பத்மாக்ரஹேபி ஸ்ப்ருசதீ ப்ரதீதா ஸ்தூலேந ருபேண வஸுந்தரா த்வாம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் பாதுகையான உன்னை ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவி என்று ஒருநாள் ஒருவர் முறை என, அவன் திருவடிகளில் ஸமர்ப்பிக்கின்றனர். ஆனால் உன்னிடம் உள்ள ஆசை காரணமாக பூதேவி உன்னை எப்போதும் தொட்டபடி இருக்கவேண்டும் என்ற எண்ணினாள். இதனால்தான் மற்றவர்களின் முறை நாள்களிலும் கூட, தான் பூமி என்ற ஸ்தூல வடிவமாக நின்று, உன்னைத் தொட்டு மகிழ்ந்தபடி உள்ளாள் போலும்.