Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 979)
Paththati 32 - பல பத்ததி
ஸமாச்ரிதாநாம் மணிபாதுகே த்வாம் விபச்சிதாம் விஷ்ணுபதே அப்யநாஸ்தா கதம் புநஸ்தே க்ருதிநோ பஜேரந் வாஸாதரம் வாஸவ ராஜதாந்யாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னையே அடைந்தவர்களுக்கு ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மீதும், ஸ்ரீவைகுண்டத்தின் மீதும் கூட ஆசை இருப்பதில்லை. இப்படி உள்ளபோது அவர்கள் இந்த்ரனின் பட்டணமான அமராவதி நகரத்தில் வசிக்கவேண்டும் என்ற ஆசையை எப்படி அடைவார்கள்?