Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 978)
Paththati 32 - பல பத்ததி
அநந்ய ஸாமாந்யதயா முராரே: அங்கேஷு அவாப்தேஷு கிரீடமுக்யை: பாதாவநி த்வம் நிஜம் ஏவ பாகம் ஸர்வாத்ம ஸாதாரணதாம் அநைஷீ:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் க்ரீடம் முதலானவற்றால் அலங்கரிக்கப்பட்ட அவனது அவயவங்கள், அந்தந்த ஆபரணங்களுக்காக மட்டுமே இருக்கின்றன. அந்த அவயவங்கள் மற்றவர்களுக்குப் பொதுவாக இருப்பதில்லை. ஆனால் உனக்கு மட்டுமே சொந்தமான திருவடிகளை “அனைத்து ஆத்மாக்களுக்கும் பொது”, என்று நீயே ஆக்கியுள்ளாய்.