Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 977)
Paththati 32 - பல பத்ததி
அலம் அச்யுத பாதுகே யதாவத் பவதீ யச்ச பதம் த்வத் ஏகதார்யம் இதரேதர பூஷிதம் தத் ஏதத் த்விதயம் ஸம்வநநாய சேதஸோ ந:
அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீயும், உன்னால் மட்டுமே தரிக்கப்படுவதாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் - ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் அலங்காரமாகவே உள்ளீர்கள். இப்படியாக உள்ள நீங்கள் எங்கள் மனதை முழுவதுமாகக் கவர்வதற்குப் போதுமானதாக உள்ளீர்கள்.