Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 976)
Paththati 32 - பல பத்ததி
த்வத் உபாஸந ஸம்ப்ரதாயவித்பி: ஸமயே ஸாத்வத ஸேவிதே நியுக்தா: பரதவ்ரதிநோ பாவாம்புராசிம் கதிசித் காஞ்சந பாதுகே தரந்தி
தங்கமயமான பாதுகையே! பாஞ்சராத்ர ஆகமத்தைப் பின்பற்றுபவர்கள் மூலம் கைக்கொள்ளப்பட்ட முறையில், உன்னை எப்படி ஆராதனை செய்வது என்று நன்று அறிந்தவர்கள் மூலம், ஒரு சிலர் உன்னை ஆராதிக்க நியமிக்கப்பட்டனர். இப்படியாக பரதன் போன்று விரதம் மேற்கொண்ட சிலர், தாண்ட இயலாத ஸம்ஸாரம் என்ற கடலைக் கடக்கின்றனர்.