Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 975)

Paththati 32 - பல பத்ததி

அபரஸ்பர பாதிநாம் அமீஷாம் அநிதம் பூர்வ நிரூட ஸந்ததீநாம் பரத வ்யஸநாத் அநூந ஸீம்நாம் துரிதாநாம் மம நிஷ்க்ருதி: த்வம் ஆஸீ:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வளர்ந்தபடி உள்ளது; ”இது முதல்” என்று கூற இயலாமல், எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ளது; உறுதியாகவும் உள்ளது; பரதனுக்கு உண்டான துன்பத்தைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது - இப்படியாக உள்ள எனது பாவங்களுக்கு ஏற்ற ப்ராயச்சித்தமாக நீயே ஆகிறாய்.