Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 974)

Paththati 32 - பல பத்ததி

ஸக்ருதபி அநுபூய ரங்கபர்த்து: த்வதுபச்லேஷ மநோஹரம் பதாப்ஜம் அபுநர்ப்பவ கௌதுகம் ததைவ ப்ரசமம் கச்சதி பாதுகே முநீநாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னையே எப்போதும் ஆராதனை செய்தபடியும், த்யானித்தபடியும் உள்ளவர்களுக்கு, உன்னுடன் சேர்ந்து நிற்பதான ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள், மேலும் அழகாகத் தோன்றுகின்றன. அந்த நேரத்தில் அவ்விதம் சேவிப்பவர்கள் முனிவர்களாகவே இருந்தாலும், ”மறுபிறவி எடுக்கக்கூடாது”, என்று எண்ணம் அப்போதே அடங்கிவிடுகிறது (மீண்டும் பிறவி எடுத்து, பாதுகையுடன் கூடிய ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைச் ஸேவித்தபடி இருக்கவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுகிறது).