Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 973)

Paththati 32 - பல பத்ததி

கிம் அஹம் மணி பாதுகே த்வயா மே ஸுலபே ரங்கநிதௌ ச்ரியா ஸநாதே கரணாநி புந: கதர்த்தயேயம் க்ருபணத்வார துராஸிகாதி துக்கை:

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியார் என்னும் நிதியுடன் கூடியதாக, மிகவும் உயர்ந்த நிதியாக ஸ்ரீரங்கநாதன் எனக்கு உள்ளான். அவன் உன் மூலம் மிகவும் சுலபமாகக் கிடைக்கக் கூடியவனாகவும் இருக்கிறான்.இப்படி உள்ளபோது, அற்பமானவர்கள் வீட்டு வாசலில் காத்து நிற்பது போன்ற துன்பங்கள் மூலம் எனது இந்த்ரியங்களை நான் வருத்துவேனோ?