Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 972)

Paththati 32 - பல பத்ததி

நிவிசேய நிரந்தரம் ப்ரதீத: த்ரிதசாநாம் விபவம் த்ருணாய மத்வா ஸவிதே தவ தேவி ரங்கபர்த்து: பதலீலாகமலம் ஸமுத்வஹந்த்யா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! தேவர்களின் ஐச்வர்யங்கள் அனைத்தையும் அற்பமாக உள்ள பொருள்களுக்குச் சமமாக எண்ணி, அவற்றைத் தள்ளி ஸ்ரீரங்கநாதனின் திருவடி என்னும் விளையாட்டுத் தாமரை மலரை தாங்கியபடி உள்ள உன் அருகில் நான் நின்று கொண்டு, உன் மீது மிகவும் ப்ரீதியுடன் வாழக்கடவேன்.