Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 1008)
Paththati 32 - பல பத்ததி
ஜயதி யதிராஜ ஸூக்தி: ஜயதி முகுந்தச்ய பாதுகாயுகளீ ததுபயதநா: த்ரிவேதீம் அவந்தயயந்த: ஜயந்தி புவி ஸந்த: இதன் பின்னர் மீண்டும் முதல் ச்லோகம் படிப்பது வழக்கம் ஆகும்: ஸந்த: ஸ்ரீரங்க ப்ருத்வீச சரணத்ராண சேகரா: ஜயந்தி புவநத்ராண பதபங்கஜ ரேணவ:
யதிகளின் தலைவர் என்று போற்றப்படும் எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் போன்ற நூல்கள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன. ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் மிகவும் மேன்மையுடன் விளங்குகின்றன. இந்த இரண்டையும் ஒருவர் தனது செல்வமாகக் கொண்டாலே போதுமானது - அப்படிப்பட்டவர்கள் மூன்று வேதங்களையும் ஸபலமாக்கியபடி வாழ்ந்து மேன்மை அடைகின்றனர்.
முதல் ச்லோகம் “ஸந்த” என்ற தொடங்கியது. இந்த ச்லோகத்தின் முதல் பதமும் “ஸந்த” என்று முடிவதைக் காண்க. இந்த ச்லோகம் கூறி முடித்தவுடன், மீண்டும் முதல் ச்லோகத்தைக் கூறுவது மரபாகும். ஸந்த: ஸ்ரீரங்க ப்ருத்வீச சரணத்ராண சேகரா: ஜயந்தி புவந த்ராண பத பங்கஜ ரேணவ: