Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 1007)
Paththati 32 - பல பத்ததி
யதி ஸ்பீதா பக்தி: ப்ரணயமுக வாணீ பரிபணம் பதத்ராண ஸ்தோத்ரம் ஹ்ருதி பிப்ருத ரங்கக்ஷிதி ப்ருத: நிருந்மாதோ யத்வா நிரவதி ஸுதா நிர்ஜ்ஜரமுசோ வசோபங்கீ: ஏதா கதம் அநுருந்தே ஸஹ்ருதய:
மக்களே! உங்களுக்கு ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் மீது பக்தி ஏற்பட்டால், வேதங்கள் மூலம் அறித்தக்கதான பாதுகையை வெளிப்படுத்தும்படியாக உள்ள இந்த ஸ்ரீரங்கநாத பாதுகா ஸஹஸ்ர ஸ்தோத்ரத்தை, உங்கள் மனதில் எப்போதும் நிலையாக வைத்து இருப்பீர்களாக. அப்படிப்பட்ட பக்தி உங்களிடம் இல்லை என்றாலும், புத்தி தடுமாற்றம் அடையாத ஒருவன், நல்ல விஷயத்தை அறியவல்ல ஒருவன், அளவற்ற சொல் அமிர்தம் அருவி போன்று கொட்டுகின்ற இந்த ஸ்தோத்ரத்தை எப்படி ஆதரிக்காமல் இருப்பான்?