Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 1006)

Paththati 32 - பல பத்ததி

ப்ருதுக வதந சங்கஸ்பர்ச நீத்யா கதாசித் சிரஸி விநிஹிதாயா: ஸ்வேந பூம்நா தவைவ ஸ்துதி: இயம் உபஜாதா மந்முகேந இதி அதீயு: பரிசரணபரா: தே பாதுகே அபாஸ்த தோஷா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது கைங்கர்யத்தில் மட்டுமே ஈடுபட்டு நிற்கும் உத்தமர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா - துருவன் முகத்தில் எம்பெருமானின் பாஞ்சஜன்யம் என்ற சங்கின் தொடர்பு ஏற்பட்டவுடன், ஞானம் உண்டானது போன்று, எனது தலையில் வைக்கப்பட்ட உனது மேன்மையால் இந்த ஸ்தோத்ரம் என் மூலமாக உண்டாயிற்று என எண்ணுவார்கள்.

எம்பெருமானைக் குறித்து துருவன் கடுமையான தவம் செய்தான். அப்போது அவன் முன்பாக எம்பெருமான் வந்து நின்றான். ஆனால் குழந்தையான துருவனுக்கு எம்பெருமானை எப்படித் துதிப்பது என்று தெரியவில்லை. அப்போது எம்பெருமான் தனது சங்கின் மூலம் துருவனின் கன்னத்தைத் தொட, அவனுக்கு ஞானம் உண்டானது. இது போன்று ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகையின் ஸ்பர்சம் தன் மீது பட்டதால், இந்தத் துதி ஏற்பட்டதாகக் கூறுகிறார்.