Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 1005)

Paththati 32 - பல பத்ததி

இத்தம் த்வம் ஏவ நிஜகேளி வசாத் அகார்ஷீ: இக்ஷ்வாகு நாதபத பங்கஜயோ: அநந்யா ஸ்வீயம் பதாவநி மயா ஸுமஹத் சரித்ரம் ஸீதேவ தேவி ஸஹஜேந கவீச்வரேண

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! இக்ஷ்வாகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைத் தவிர வேறு எதனையும் நாடாத சீதை, தனது உடன் பிறந்தவரான வால்மீகி முனிவரைக் கொண்டு, தனது மேன்மைகள் வெளிப்படும் இராமாயணத்தைச் செய்வித்தாள். நீயும் அவள் போலே, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பிரியாதவளாக உள்ளாய். ஆக நீயும் அவள் போன்று என்னைக் கொண்டு, உன்னுடைய மிகப் பெரிய சரிதத்தை ஏற்படுத்திக் கொண்டாய்.