Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 1004)
Paththati 32 - பல பத்ததி
ஸங்கர்ஷயந்தி ஹ்ருதயாநி அஸதாம் குணாம்சே ஸந்தஸ்து ஸந்தமபி ந ப்ரதயந்தி தோஷம் தத் ரங்கநாத சரணாவநி தே ஸ்துதீநாம் ஏகா பரம் ஸதஸதோ: இஹ ஸாக்ஷிணீ த்வம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! கவிகள் அல்லாதவர்களில் அஸத்துக்கள் எனப்படும் மனிதர்களின் இதயங்கள், நல்ல விஷயங்களில் உள்ள நன்மைகளிலும் குற்றமே காண முற்பட்டு, இதனால் பொறாமையும் கொள்ளும். ஸத்துக்கள் என்பவர்கள் குற்றம் இருந்தாலும் அவற்றை வெளியிடமாட்டார்கள். ஆகவே இந்த நூலில் உள்ள குணங்களுக்கும், தோஷங்களுக்கும் நீயே மத்யஸ்தமாக நின்று ஆராயவேண்டும்.