Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 1003)

Paththati 32 - பல பத்ததி

யே நாம பக்திநியதா: கவயோ மதந்யே மாத: ஸ்துவந்தி மதுஸூதந பாதுகே த்வம் லப்ஸ்யே குணாம்ச விநிவேசித மாநஸாநாம் தேஷாம் அஹம் ஸபஹுமாந விலோகிதாநி

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! என் தாயே! அம்மா! என்னைக் காட்டிலும் உன்னிடம் பக்தி அதிகமாக உள்ள கவிஞர்கள் உன்னைத் துதிக்கக்கூடும். அவர்கள் உனது வாத்ஸல்யம் போன்ற குணங்களில் தங்கள் மனதை நிலை நிறுத்திப் புகழ்வார்கள். அவர்களின் கடாக்ஷம் நிறைந்த பார்வையை நான் அடையப் போகிறேன்.