Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 1002)

Paththati 32 - பல பத்ததி

மாத: ஸ்வரூபம் இவ ரங்கபதே: நிவிஷ்டம் வாசாம் ஆஸீமநி பதாவநி வைபவம் தே மோஹாத் அபிஷ்டுதவத: மம மந்த புத்தே: பாலஸ்ய ஸாஹஸம் இதம் தயா ஸஹேதா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைத்தாயே! ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபத்தைக் காட்டிலும், வாக்கின் மூலம் எட்டாத பெருமை கொண்டவளாக நீ உள்ளாய். இப்படிப்பட்ட உனது மேன்மைகளை, தாழ்வான அறிவு கொண்ட சிறுவனாகிய நான், எனது அறியாமை காரணமாகத் துதிக்க முற்பட்டேன். உனது மேன்மையை ஆயிரம் ச்லோகத்தின் மூலம் அளவிட்டுக் கூற முயன்ற எனது அறியாமையைப் பொறுத்துக் கொண்டு, எனது ஸாஹஸத்தை உனது தயை மூலம் மன்னிப்பாயாக.