Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 1001)

Paththati 32 - பல பத்ததி

இதி ரங்கதுரீண பாதுகே த்வம் ஸ்துதி லக்ஷ்யேண ஸஹஸ்ரசோ விம்ருஷ்டா ஸபலம் மம ஜந்ம தாவத் ஏதத் யதிஹாசாஸ்யம் அத: பரம் கிம் ஏதத்

ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! இப்படியாக உன்னைத் துதிப்பது என்ற ஸ்தோத்ரம் ஒன்றைச் சாக்காக வைத்துக்கொண்டு, என்னால் ஆயிரக்கணக்கில் நீ சிந்திக்கப்பட்டாய். இதன் மூலமாக எனது பிறவியானது மிகுந்த ப்ரயோஜனம் மிக்கதாகி விட்டது. இதற்கு மேல் இந்த உலகத்தில் நான் பெற வேண்டியதும், ப்ரார்த்தனை செய்யவேண்டியதும் வேறு என்ன உள்ளது?