Sri Paduka Sahasram - Paththati 32 - பல பத்ததி (ச்லோகம் 1000)
Paththati 32 - பல பத்ததி
க்ரீடா லௌல்யம் கிமபி ஸம்யே பாதுகா வர்ஜயந்தீ நிர்வேசம் ஸ்வம் திசஸி பவதீ நாதயோ: ஸ்ரீதரண்யோ: மாமபி ஏவம் ஜநய மதுஜித் பாதயோ: அந்தரங்கம் ரங்கம் யாஸௌ ஜநயஸி குணை: பாரதீ ந்ருத்தரங்கம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னையே தங்கள் எஜமானியாக எண்ணி, தங்களது ஐச்வர்யம் அனைத்தும் உன்னுடைய வசப்பட்டவை என்று எண்ணியபடி இருக்கின்ற ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர்களுக்கு நீ செய்வது என்னவென்றால் - அவர்கள் விரும்பும் காலத்தில், உன்னால் மட்டுமே ஏகபோகமாக அனுபவிக்கப்படும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் அனுபவம் என்ற சுகத்தை, உனது ஸஞ்சாரத்தை சற்றே நிறுத்திவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறாய். இது போன்று என்னையும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கு ஏற்ற அடிமையாக நீ செய்தருள வேண்டும். உனது எந்தக் குணம் மூலம் நீ ஸ்ரீரங்கத்தை ஸரஸ்வதியின் நாட்டிய மேடையாக மாற்றுகிறாயோ, அந்தக் குணம் மூலம் எனக்கு அருளவேண்டும்.