Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 970)
Paththati 31 - நிர்வேத பத்ததி
பாஷாண கல்பம் அந்தே பரிசித கௌதம பரிக்ரஹந்யாயாத் பதிபத பரிசரணார்ஹம் பரிணமய முகுந்த பதரக்ஷிணி மாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது அந்திம காலத்தில் கல்லைப் போன்று நான் எந்தவிதமான நினைவும் இன்றிக் கிடப்பேன். அந்த நிலையில் நான் உனக்கு முன்பே பழக்கமான கௌதம முனிவரின் பத்னியாகிய அகலிகை போன்று கிடப்பேன். அவளை நீ எப்படிப் பிழைக்க வைத்து, அவளது கணவனின் பணிவிடையில் ஈடுபடுத்தினாயோ, அது போன்று என்னையும் எனது பதியான ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்யும்படிச் செய்வாயாக.