Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 969)

Paththati 31 - நிர்வேத பத்ததி

காலே ஜந்தூந் கலுஷகரணே க்ஷிப்ரம் ஆகாரயந்த்யா: கோரம் நாஹம் யமப்ரிஷதோ கோஷமாகர்ணயேயம் ஸ்ரீமத் ரங்கேச்வர சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம் ஸேவாஹ்வாநாம் ஸபதி ச்ருணுயாம் பாதுகா ஸேவக இதி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது புலன்கள் ஒடுங்கி நிற்கின்ற அந்திம காலத்தில், ”உடனடியாக வா”, என்று மனிதர்களை விரட்டுகின்ற யமகிங்கரர்களின் பயங்கரமான ஓசையை நான் கேட்காமல் இருக்கவேண்டும். ஸ்ரீரங்கநாச்சியாருடன் சேர்ந்துள்ள ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்பவர்களால், ”அந்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகா ஸேவகனை அழைத்து வா”, என்ற அருளிப்பாட்டை வெகு விரைவாக நான் கேட்கவேண்டும்.

ஸ்வாமி தேசிகனுக்கு உபயவேதாந்தாசார்யர், கவிதார்க்கிகஸிம்ஹம், ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர் போன்ற பல விருதுகள் திருவரங்கத் திவ்யதம்பதிகளால் அளிக்கப்பட்டது. ஆனால் தனது அந்திம காலத்தில் அந்தப் பெயர்கள் கூறி அழைப்பதை ஸ்வாமி பெரிதாக எண்ணவில்லை. மாறாக “பாதுகா ஸேவகன்” என்ற பெயரையே விரும்புகிறார்.