Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 968)

Paththati 31 - நிர்வேத பத்ததி

கோமாயூநாம் மலயபவநே தஸ்கராணாம் ஹிமாம்சௌ துர்வ்ருத்தாநாம் ஸுசரிதமயே ஸத்பதே த்வத்ஸநாதே தத்வஜ்ஞாநே தரளமநஸாம் சார்ங்கிண: பாதரக்ஷே நித்யோத்வேகோ பவதி நியதே: ஈத்ருசீ துர்விநீதி:

சார்ங்கம் என்ற வில்லை உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! குள்ளநரிகளுக்கு தென்றல் காற்றும், திருடர்களுக்குக் குளிர்ந்த கிரணங்கள் கொண்ட பௌர்ணமி நிலவும் பிடிக்காமல் உள்ளது. தீய நடத்தை உள்ளவர்களுக்கு உன்னையே தெய்வமாக எண்ணியபடி பின்பற்றக்கூடிய தர்ம மார்க்கம் என்பது பிடிக்காமல் உள்ளது. தடுமாறும் மனதைக் கொண்டவர்களுக்கு, உண்மையான ஞானம் அறிவதில் வெறுப்பு உள்ளது. இப்படியாக அல்லவோ தெய்வத்தின் போக்கு உள்ளது?