Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 967)

Paththati 31 - நிர்வேத பத்ததி

அந்தர்லீநை: அகபரிகரை ஆவிலா சித்த வ்ருத்தி: சப்தாதீநாம் பரவசதயா துர்ஜயாநி இந்த்ரியாணி விஷ்ணோ: பாத ப்ரணயிநி சிராத் அஸ்ய மே துக்க ஸிந்தோ: பாரம் ப்ராப்யம் பவதி பரயா வித்யயா வா த்வயா வா

எங்கும் நிறைந்தவனான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் மீது மிகவும் ஆசை கொண்ட பாதுகையே! எனது மனதிற்குள் நிறைந்துள்ள பாவங்களின் காரணமாக மனம் மிகவும் கலங்கியே நிற்கிறது. இந்த்ரியங்கள் அனைத்தும் சப்தம் போன்ற அவற்றின் விஷயங்களுக்கு வசப்பட்டு நிற்பதால், வெல்ல இயலாதபடி உள்ளன. இத்தகைய எனது துக்கம் நீங்குவது என்பது பக்தியின் மூலமா (ஸ்ரீரங்கநாதனிடம் எல்லையற்ற ப்ரியம்), ப்ரபத்தி மூலமா (ஸ்ரீரங்கநாதனிடம் அசைக்க இயலாத நம்பிக்கை) அல்லது உன்னைச் சரணம் அடைவதன் மூலமா?