Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 966)

Paththati 31 - நிர்வேத பத்ததி

யதி கிமபி ஸமீஹே கர்ம கர்த்தும் யதாவத் ப்ரதிபதம் உபஜாதை: ப்ரத்யவேயாம் நிமித்தை: அவதிரஸி யதி த்வம் தத்ர நைமித்திகாநாம் சரணம் இஹ கிம் மே சௌரிபாதாவநி ஸ்யா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சாஸ்த்ரங்கள் விதிக்கின்ற கர்மங்களை நான் அனுஷ்டிக்க முயற்சி செய்யும்போது பலவிதமான தவறுகள் அடிக்கடி ஏற்பட, இதனால் குற்றம் நிறைந்தவன் ஆகிறேன். இப்படிப்பட்ட தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக நீயே உள்ளாய். இப்படி நீ உள்ளபோது, கர்மங்களை நான் கடைப்பிடிக்காமல் உள்ள நேரத்திலேயே நீ ஏன் என்னைக் காப்பாற்றக்கூடாது?