Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 965)
Paththati 31 - நிர்வேத பத்ததி
சரணம் அதிகத: த்வாம் சார்ங்கிண: பாதரக்ஷே ஸக்ருதபி விநியுக்தம் த்வத் ஸபர்யாதிகாரே புநரபி கதமேநம் ஹஸ்தம் உத்தாநயேயம் தநமத முதிதாநாம் மாநவாநாம் ஸமாஜே
சார்ங்கம் என்னும் வில்லைக் கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னையே சரணம் என்று புகுந்த நான், ஒருமுறையாவது உன்னை ஆராதிக்கப் பயன்படுத்தப்பட்ட எனது கையை, செல்வம் அதிகமாக உள்ள காரணத்தினால் கர்வத்துடன் ஆனந்தமாக உள்ள மனிதர்களின் முன்பாக எவ்விதம் நீட்டி நிற்பேன்?