Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 964)

Paththati 31 - நிர்வேத பத்ததி

விவித விஷய சிந்தா ஸந்ததாபி: சிரம் மாம் ஜநித கலுஷம் இத்தம் தேவி துர்வாஸநாபி: பதஸரஸிஜயோ: த்வம் பாதுகே ரங்கபர்த்து: பரிமள பரிவாஹை: பாவநை: வாஸயேதா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! உலக விஷயங்கள் என்னும் பலவிதமான சிந்தனைகளின் வாஸனைகள் காரணமாக நான் பாவங்கள் என்னும் அழுக்கு சூழ நிற்கிறேன். இந்த நாற்றம் தீரும்படியாக, ஸ்ரீரங்கநாதனின் திருவடித்தாமரையின் வாசனை வெள்ளம் மூலம் என்னை நறுமணம் வீசும்படிச் செய்வாயாக.