Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 963)

Paththati 31 - நிர்வேத பத்ததி

கிம் வா பவிஷ்யதி பரம் கலுஷ ஏக வ்ருத்தே: ஏதாவதா அப்யநு பஜாதம் அநேஹஸா மே ஏகம் ததஸ்தி யதி பச்யஸி பாதுகே தே பத்மாஸஹாய பதபங்கஜ போகஸாம்யம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இது நாள் வரை நான் பாவங்கள் செய்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டபடி உள்ளேன். இவற்றின் பலனாகிய துன்பமோ இன்பமோ இனிப் புதிதாக எதுதான் எனக்கு ஏற்படப்போகிறது? ஆனால் நீ என்னை உற்று நோக்கினால் போதுமானது. அதன் மூலம், இதுவரை எனக்குக் கிட்டாமல் உள்ள ஒன்று கிட்டிவிடும். அது என்னவென்றால் - ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை உனக்கு சமமாக நின்று நானும் அனுபவிக்கும் நிலையே ஆகும்.