Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 962)

Paththati 31 - நிர்வேத பத்ததி

ஸம்வாஹிகா சரணயோர் மணிபாதரக்ஷே தேவஸ்ய ரங்கவஸதே: தயிதா நநு த்வம் கஸ்த்வாம் நிவாரயிதும் அர்ஹதி யோஜயந்தீம் மாத: ஸ்வயம் குணகணேஷு மம அபராதாந்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! ஸ்ரீரங்கவிமானத்தைத் தனது ஆஸ்தானமாகக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் தாங்கியபடி உள்ள ப்ரியமானவள் நீ அல்லவோ? எனது குற்றங்களுக்காக ஸ்ரீரங்கநாதன் என்னைத் தண்டிக்க முற்பட்டாலும், எனது குற்றங்களைச் சட்டென்று குணங்களாக நீ மாற்றிக் காட்டி, அவனது தண்டிக்கும் செயலைத் தடுக்கிறாய். இப்படிப்பட்ட உன்னை வேறு யார் தடுக்கக்கூடும்?