Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 961)
Paththati 31 - நிர்வேத பத்ததி
அச்சேத்யயா விஷய வாகுரயா நிபத்தாந் தீநாந் ஜநார்த்தந பதாவநி ஸத்பதஸ்த்தா ப்ராய: க்ரமேண பவதீ பரிக்ருஹ்ய மௌளௌ காலேந மோசயதி ந: க்ருபயா ஸநாதா
ஜனங்களால் எப்போதும் வேண்டப்படும் ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அறுத்துக் கொண்டு வெளியே வர இயலாதபடி இருக்கின்ற உலக விஷயங்கள் என்னும் வலையில் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். அப்போது உனது கருணை காரணமாக நீ ஆகாய மார்க்கமாக வருகிறாய். சரியான காலகட்டத்தில் மேலே நின்றபடி எங்கள் தலையைப் பிடித்து, அந்த வலையில் இருந்து இழுத்து, எங்களை விடுவிக்கிறாய்.