Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 960)

Paththati 31 - நிர்வேத பத்ததி

வ்யாமுஹ்யதாம் த்ரிவித தாபமயே நிதாகே மாயாவிசேஷ ஜநிதாஸு மரீசிகாஸு ஸம்ஸ்ப்ருஷ்ட சௌரி சரணா சரணாவநி த்வம் ஸ்தேயா ஸ்வயம் பவஸி ந: சரமே புமர்த்தே

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆதிதைவிகம் என்ற மூன்று விதமான வேதனைகள் நிறைந்த கோடைகாலம் போன்று இந்த ஸம்ஸாரம் உள்ளது, இந்தக் கோடையில், ப்ரக்ருதியின் மூன்று குணங்களானவை கானல்நீரைப் போன்று தோன்றி, எங்களை மயக்கியபடி உள்ளன. இந்த நேரத்தில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் வருடியபடி உள்ள நீயே, உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷ விஷயத்தில் எங்களிடம், ”இந்தத் திருவடிகளைப் பாருங்கள் – இதுதான் உயர்ந்த மோக்ஷம். இது நிச்சயம் கிட்டும்”, என்று கூறுகிறாய் போலும்.