Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 959)
Paththati 31 - நிர்வேத பத்ததி
தௌவாரிக த்விரஸந ப்ரபலாந்தராயை: தூயே பதாவநி துராட்ய பிலப்ரவேசை: தத் ரங்கதாம நிரபாய தந உத்தராயாம் த்வய்யேவ விச்ரமய மங்க்ஷு மநோரதம் மே
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பாம்பின் புத்துக்கள் போன்று இந்த உலகில் உள்ள தீமை நிறைந்த செல்வந்தர்களின் வீடுகள் உள்ளன. அந்த வீடுகளின் வாயிலில் உள்ள வாயிற்காப்போன் பாம்பு போன்றே உள்ளான். இப்படிப்பட்ட இடையூறுகளால் நான் பலமுறை துயரப்படுகிறேன். ஸ்ரீரங்கநாதன் என்ற அழிவற்ற பெரும் செல்வத்தை நீ எப்போதும் தாங்கியபடி உள்ளாய். இப்படிப்பட்ட உன்னிடம் நிலையாக இருக்கும்படி எனது ஆசை என்ற தேரைச் செலுத்தி வருவாயாக.