Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 958)
Paththati 31 - நிர்வேத பத்ததி
மாத: த்வத் அர்ப்பித பரஸ்ய முகுந்தபாதே பத்ரேதராணி யதி நாம பவந்தி பூய: கீர்த்தி: ப்ரபந்ந பரிரக்ஷண தீக்ஷிதாயா: கிம் ந த்ரபேத தவ காஞ்சந பாதரக்ஷே
என் தாய் போன்ற தங்கமயமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உன்னால் ஸமர்ப்பிக்கப்பட்ட, மோக்ஷத்தின் உபாயமான பக்தி என்பதைச் சரியாகச் செய்யவேண்டிய பொறுப்பைச் சுமர்த்தப்பட்டவனாகிய எனக்கு - அதன் பின்னரும் நன்மை அல்லாத தீமைகளே தொடர்ந்து வருகின்றன என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால், சரணம் அடைந்தவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற விரதம் கொண்டுள்ள உனது கீர்த்தியானது வெட்கம் கொள்ளாதோ? (அதற்குக் பயந்தாவது நீ காப்பாற்றவேண்டாமோ)