Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 957)

Paththati 31 - நிர்வேத பத்ததி

க்ஷீபா அஸி காஞ்சந பாதாவநி கைடபாரே பாதாரவிந்த மகரந்த நிஷேவணேந தேவி த்வதந்திகஜுஷ: கதம் அந்யதா மே தீநாக்ஷராணி ந ச்ருணோஷி தயாதிகா த்வம்

தங்கமயமான பாதுகையே! கைடபன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்ற தாமரையில் உள்ள தேனைப் பருகி மயக்கம் கொண்டு நீ உள்ளாய். இவ்விதம் நீ மயக்கம் கொள்ளாமல் தெளிந்த நிலையில் இருந்தாய் என்றால் – கருணை நிரம்பிய நீ, எனது வருத்தம் நிறைந்த சொற்களைக் கேட்காமலா இருந்திருப்பாய் (நீ கேட்காத காரணத்தால் அரங்கனின் திருவடி அழகில் மயங்கி உள்ளாய் என்று கருத்து).