Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 956)
Paththati 31 - நிர்வேத பத்ததி
மாதர் முகுந்த கருணாம் அபி நிஹ்நுவாநாத் கிம் வா பரம் கிமபி கில்பிஷதோ மதீயாத் காடம் க்ருஹீத சரணா கமநாபதேசாத் தத் ப்ரேரண ப்ரணயிநீ தவ சேத் ந லீலா
தாயே! ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே (கடந்த ச்லோகத்தில் “நீயாகவே தேடி வர வேண்டும்”, என்று கூறியவுடன் பாதுகைகள், ”நான் உன்னைத் தேடி வரவில்லை என்றால் உனது பாவமே அதற்குக் காரணம்”, என்றாள். உடனே ஸ்வாமி அவளிடம், “உனது லீலைகள் என் பாவங்களை விட வலிமையானது அல்லவோ?”, என்கிறார்) ஸஞ்சாரம் என்பதைக் காரணமாகக் கொண்டு ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை நீ கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாய். இப்படியாக அவனைப் புறப்படத் தூண்டியபடி உள்ளாய். இத்தனை உயர்ந்தவையாக உனது லீலை இல்லை என்றால் – ஸ்ரீரங்கநாதன் தானாகவே என் மீது செலுத்துகின்ற கருணையை மறுக்கின்ற அளவிற்கு உள்ள எனது பாவங்களை விட உயர்ந்த வஸ்து வேறு என்ன உள்ளது? (உனது கருணை மட்டுமே எனது பாவங்கள் நீக்கவல்லது)