Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 955)
Paththati 31 - நிர்வேத பத்ததி
யத்யபி அஹம் தரளதீ: தவ ந ஸ்மரேயம் ந ஸ்மர்த்தும் அர்ஹதி கதம் பவதீ ஸ்வயம் மே வத்ஸே விஹார குதுகம் கலயதி அவஸ்தா கா நாம கேசவ பதாவநி வத்ஸல்யா
அழகான தலைமுடி கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உலக விஷயங்களில் மேயும் கன்று போன்ற புத்தியுடையவன் என்பதால், பசுவாகிய உன்னை நான் எண்ணாமல் இருக்கக்கூடும். தனது கன்று வெகுதூரம் சென்று விளையாட எண்ணும்போது, பசுவின் நிலை எப்படி இருக்கும்? அந்தப் பசு எவ்விதம் தனது கன்றைத் தேடிச் செல்லுமோ அது போன்று, நீயாகவே என்னை எண்ணி வரவேண்டும்.