Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 954)

Paththati 31 - நிர்வேத பத்ததி

கமலாத்த்யுஷிதே நிதௌ நிரீஹே ஸுலபே திஷ்டதி ரங்க கோச மத்யே த்வயி தத் ப்ரதிலம்பநே ஸ்திதாயாம் பரம் அந்விச்சதி பாதுகே மந: மே

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்ககநாச்சியாரால் எப்போதும் வாஸம் செய்யப்படுவதாகவும், உலக விஷயங்கள் மீது உள்ள ஆசைகளை நீக்குவதாகவும், மிகவும் எளிதாக அடையக்கூடியதாகவும் உள்ள ஸ்ரீரங்கநாதன் என்ற மிகப் பெரிய புதையல், ஸ்ரீரங்கவிமானம் என்ற இடத்தில் உள்ளது. அந்தப் புதையலை அடைய உதவும் மந்திரவாதி போன்று நீ உள்ளாய். இப்படி நீங்கள் இருவரும் உள்ளபோது, உங்களை நாடாமல் எனது மனம் வேறு எதனையோ தேடுகிறதே!