Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 953)
Paththati 31 - நிர்வேத பத்ததி
பரிவர்த்தயிதா பிதாமஹாதீந் த்வம் இவ அநந்தம் அஸௌ வஹதி அநேஹா அதுநாபி ந ஸௌரிபாதுகே த்வாம் அநக ஆலம்பநம் நாப்யுபைதி சித்தம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது பாட்டன், அவனுக்குப் பாட்டன் என்று தொடங்கி நான்முகன் வரையுள்ள பல உயிர்களும் மாற்றி மாற்றி ஸம்ஹாரம் செய்யப்பட்டும், ஸ்ருஷ்டி செய்யப்பட்டும் செய்வதான காலச்சுழற்சி என்பது, நீ ஸ்ரீரங்கநாதனை தாங்கியபடி உள்ளது போன்று, எல்லையற்ற காலமாக இயங்கி வருகிறது. ஆயினும் எனது மனமானது, த்யானிக்கத் தகுந்த மிகவும் உயர்ந்த வஸ்துவாக உள்ள உன்னைக் கைக்கொள்ளாமல் இருக்கிறதே!