Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 952)

Paththati 31 - நிர்வேத பத்ததி

அபி ஜந்மநி பாதுகே பரஸ்மிந் அநகை: கர்மபி: ஈத்ருசோ பவேயம் ய இமே விநயேந ரங்கபர்த்து: ஸமயே த்வாம் பதயோ: ஸமர்ப்பயந்தி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அந்தந்த காலங்களில் ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகர்கள் உன்னை அவனது திருவடிகளில் மிகவும் அன்புடன் ஸமர்ப்பணம் செய்கிறார்கள். எனது அடுத்த பிறவியில் இவர்கள் போன்று ஸ்ரீரங்கநாதனின் அர்ச்சகராகப் பிறந்து உனக்கு கைங்கர்யம் செய்வேனோ?