Sri Paduka Sahasram - Paththati 31 - நிர்வேத பத்ததி (ச்லோகம் 951)
Paththati 31 - நிர்வேத பத்ததி
ப்ரபத்யே பாதுகாம் தேவீம் பரவித்யாம் இவ ஸ்வயம் யாம் அர்ப்பயதி தீநாநாம் தயமாநோ ஜகத் குரு:
அனைத்து உலகிற்கும் முதல் ஆசார்யனாக உள்ள ஸ்ரீரங்கநாதன் மிகவும் கருணையுடன், துன்பம் உற்றவர்கள் உய்யும் விதமாகச் செய்வது என்னவென்றால் – மோக்ஷ ஸாதனமான பக்தி மற்றும் ப்ரபத்தி என்னும் ஞானம் போன்ற தனது பாதுகைகளைத் தானாகவே அளிக்கிறான். அந்தப் பாதுகைகளை நான் சரணம் அடைகிறேன்.