Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 950)
Paththati 30 - சித்ர பத்ததி
சரம் அசரம் ச நியந்து: சரணௌ அநிதம் பரேதரா சௌரே: சரம் புருஷார்த்த சித்ரௌ சரணாவநி திசஸி சத்வரேஷு ஸதாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அடியார்களைக் காப்பாற்றும் அதே சிந்தனை கொண்டவளாக உள்ளாய். அசைகின்றதும், அசையாமல் உள்ளதும் ஆகிய அனைத்தையும் நியமிக்கின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள், உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பற்றிய ஞானத்தை உண்டாக்கி, காக்கவல்லவையாக உள்ளன. இப்படிபட்ட அவனது திருவடிகளை (இதன் மூலமாக ஸ்ரீரங்கநாதனை) ஸாதுக்களின் வீட்டிற்கே அழைத்து வந்து, அவர்களின் பூஜை அறையில் நிலையாக நிறுத்தி விடுகிறாய். ஆக நீ ஸ்ரீரங்கநாதனை வெகு சுலபமாக அவர்களது இல்லங்களுக்கு அழைத்து வருகிறாய்.