Sri Paduka Sahasram - Paththati 30 - சித்ர பத்ததி (ச்லோகம் 949)

Paththati 30 - சித்ர பத்ததி

தாரஸ் பாரதர ஸ்வர ரஸ பர ரா ஸா பதாவநீ ஸாரா தீரஸ்வைர சர ஸ்திர ரகுபுரவாஸ ரதி ராம ஸவா

தான் தொடங்கிய செயலில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல், எடுத்த செயலை நிறைவேற்றுபவள்; தனது விருப்பத்தின்படி ஸஞ்சாரம் செய்பவனும், மாறாத குணங்கள் கொண்டவனும், ரகுவம்ஸத்தினரின் ராஜ்யமான அயோத்தியில் உள்ளவர்களிடம் ஆசையுடன் உள்ளவனும் ஆகிய இராமனைத் தான் ஏவும்படியாக வசப்படுத்தியவள்; தனது இனிமையான நாதங்கள் மூலம் உரத்த தொனியில் ஆனந்த அளிக்கவல்லவள் – இப்படியாக ஸௌலப்யம் போன்றவை வெளிப்படும்படியாக உள்ளாள்.

இந்த ச்லோகம் எட்டு தளங்கள் கொண்ட பத்மபந்தம் என்பதாகும். இதில் ஸ்ரீரங்கநாதனின் திருவடி அமைப்பு உள்ளதைக் கணலாம். இந்த யந்திரத்தையும் ச்லோகத்தையும் அன்றாடம் அனுஷ்டித்து வந்தால், எந்தவிதமான தடைகளும் நீங்கிவிடும் என்பது பலரின் கருத்தாகும்.